Thursday 13 November 2014

காவேரி பூம்பட்டின கலையழகி நான்



காவேரி பூம்பட்டின கலையழகி நான்

செழுமையும் வளமையுமாய் தேகம் கொண்ட எனைத் தென்றல் தீண்டினாலும் அச்சமுற்றே மேனி சிலிர்க்கும்

மண்பார்த்த விழிகள் கொண்ட மங்கை நான்

பார்க்க பார்க்க பரவசமூட்டும் என்னழகில் தன்னழகு எழுந்து தவிப்போடுதானாட..ஆசை கர்வமேந்தி மணமுடித்தான் ..கோவலனெனும் என் காவலன்

இரவோடு விடியாத பகல்தேடி இன்பமுற்று களிப்புற.... ஈடு கொடுத்து நடனமாடியது....

எவருக்கும் தெரியாத என் கற்பு ஒழுக்கங்கள்

எடுத்து முன்காட்டி பின் மயக்கும் அழகுகலை தேகசுழிவுபயின்ற ,,ஆடல்குல மாதவி வந்தாள்

மேனி அவளில் பெண்மையெனினும் மேன்மை அவளின் இறைநாயகன் எனினும்

பங்கிட்டதோ பரிதாப சபலங்கள்தான்

அரசன் முதல் ஆண்டியும் வேறுபாடின்றி தேடி அடையும் உயிர்குழியில் சிருங்கார மயக்கத்தில் ...என் மன்னவனும் தான் வீழ்ந்தான்

உன் நிம்மதி என் அமைதி .. உன் மகிழ்வு ..என் நிறைவு

எனவே பசலை வாட்டிய போதும் பாசமேந்தினேன் பதிவிரதையாய்

ஆணின் அன்பு அவன் தேக சுகத்திலோ தேடல் சுகத்திலோ....

என்னின் பேரன்பு .. என் கற்பின் ஒழுக்கத்தில்

என்றொருநாள் என்னவன் வருவான் என்றிருந்தேன் மன்னவனும் வந்தான் மதி மீண்டு

வந்தவன் வந்தானடி வறியவனாய்

வாரியணைத்த என் அன்பில் தன் பிழை உதிர்த்த கண்ணீர் என் மார்பில் ஈரமாக

கலங்கலாமா...வருந்தலாமா..என்றேன் வா ஊர்துறப்போம்..உறவு வேண்டோம்

என கூறி ,,என்அணைத்த தாய்மையில் கட்டுண்டான் மீண்டும் என்னில் கள் உண்டான் என் தலைவன்

எமனவன் எட்டிப்பார்க்க.. கள்வன் என பொய்குற்றம்சுமந்த அவனை மண்ணும் உண்டது

பொறுக்குமா என் கற்பு..அடுக்குமா என் நெஞ்சம்

மாணிக்கபரல் உடைத்து என் தலைவன் பழி நீக்கி மதுரை எரித்தது...என் ஒழுக்கத்திமிர்

கதைகேட்டு காவியம் படைத்த இளவரசு ..இளங்கோவடியே

தன் தலைவன் என உறவு சூடிக்... கூடிய பெண்மை கற்பின் ....

இரவுப்பிரிய அழகு தீர்வுக்கும்

இடர் தவறிய நீதிக்கும்

உன் உளி செதுக்கியதோ எனக்கோர் அதிகாரம் .. சிலம்பின் ஒலியாய்...

நானும் பேர்பெற்றேனே ..மண்னின் மாந்தருக்கு ஓர் ஒழுக்க கோவில் உறையும்.... இறையாய்

மாநாய்கனின் மகள்..மாசாத்துவன் புதல்வனினால் புனிதமடைந்தாள்......கல் உறையும் கடவுளாய்

பெண்மையே நீயும் ஓர் ஆண்மையே உன் கற்பே..என்றும்........உனக்கு ஆளுமையே !!!

3 comments:

  1. இத்தனை நாள் என் கண்ணில் படாமல் இருந்திருக்கிறீர்.உங்கள் அறிமுகத்தில் கண்ட இப்பதிவு என்னை உங்களைப் படிக்கத் தூண்டியது, நீங்கள்சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தை சுருக்கி உங்கள் பாணியில் எழுதி இருக்கிறீர்கள் நானும் ராம காவியத்தை ஒரே வாக்கியத்தில் ஆறு காண்டங்களும் வருமாறு எழுதி இருந்தேன் . என்ன ஒற்றுமை. ...!சுட்டி இதோ படித்துப் பார்த்துக் கருத்துக் கூறலாமே
    http://gmbat1649.blogspot.in/2011/06/blog-post_11.html

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி சார். அவசியம் படிக்கிறேன். சிலம்பு காவியம் போல் கர்ணனையும் ராமாயனத்தையும் முயற்சி செய்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. இரத்தினச் சுருக்கமாய் சிலப்பதிகாரம் கவிநடையில் கண்டு மகிழ்ந்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..